ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன் LORD, I BELIEVE 53-0901 செவ்வாய்க்கிழமை மாலை, செப்டம்பர் 1, 1953 சிகாகோ சுவிசேஷ கூடாரம், சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன் (53-0901) [சபையார் பாடுகிறார்கள், விசுவா சித்தால் மட்டும் போதும்] எங்கள் பரம பிதாவே, இன்றிரவு நாங்கள் மீண்டும் திரும்பி வர நீர் எங்களை அனுமதித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தை யிலிருந்து நாங்கள் இப்போது கேட்ட விசுவாசத்தைத் தூண்டும் செய்திக்கு மிகவும் நன்றி. தேவனே, அந்த விதைகள் இங்குள்ள ஒவ்வொரு இதயத்திலும் ஆழமாகப் பதிய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு இயேசு கிறிஸ்துவுக்காக இது ஒரு பூரண வெற்றியை கொண்டு வரட்டும். மக்களின் இதயங்களில் இரட்சிப்பு குறித்த முடிவுகளும், சுகமளிப்பது குறித்த முடிவுகளும் உண்டாகட்டும். இதற்கு முன்பு ஒருபோதும் காணாதது போல அவர்கள் அதை அங்கே காணட்டும். மேலும் அவர்கள் தங்கள்-தங்கள் உணர்த்துதல்களின்படி-உணர்த்துதல்களின் படி செயல்படட்டும். ஏனெனில் இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் கேட்கிறோம். ஆமென். மாலை வணக்கம், நண்பர்களே. நமது ஆண்டவரின் நாமத்தில் இன்றிரவு மீண்டும் ஊழியம் செய்ய இங்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த அற்புதமான செய்தியைக் கேட்டது, என் இதயத்தை சற்று ஊக்கப்படுத்தியது. சற்று சோர்வாக இருக்கிறேன், நேற்றிரவு முழுதும் இன்று பகல் முழுதும் நாங்கள் காரோட்டி வந்தோம், சற்று நேரத்திற்கு முன்புதான் திரும்பி வந்தோம், நான் உடனடியாக இங்கு விரைந்து வந்தேன். பின்பு... 2 இங்கே வானிலையில் எந்தவிதமான தளர்வும் ஏற்பட்டிருப்பதாக நான் காணவில்லை. இன்னும் சில நாட்களுக்கு அவர்கள் அதை உறுதியளிக்கவும் இல்லை. இரவு நேரத்தில் இந்த சூடான கட்டிடத்தில் அமர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தைக் கேட்க நீங்கள் மனமுவந்து வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே நான் ஜெப வரிசையை உடனடியாகத் தொடங்க கடமைப்பட்டுள்ளேன். 3 நான் முதலில் இங்கே சில வேதப்பகுதிகளை வாசிக்கப் போகிறேன். அதன் பின்பு நான் நேராக வியாதியஸ் தர்களுக்காக ஜெபிக்கச் செல்லப் போகிறேன், பரிசுத்த யோவான் 9-ம் அதிகாரம். அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்த வர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். சிலர் அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ நான்தான் அவன் என்றான். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை யடைந்தேன் என்றான். அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச்சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைப்பண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். அதினிமித்தம்: இவன் வயதுள்ள வனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள். ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான். அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கி றதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமா னதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப் பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள் அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயி ருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான் இயேசு அவனை நோக்கி. நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர் தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். 4 எவ்வளவு அற்புதமான தருணம். குருடனாய்ப் பிறந்த ஒரு மனுஷனின் கண்களை இயேசு திறந்தார். அதன்பின்பு மக்கள் அதை நம்பவில்லை, அதைக் குறித்து அவர் என்ன செய்தார் என்று அவனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இயேசு அவனுக்குச் சொன்னதை மட்டுமே அவன் செய்தான். எந்தவொரு நபரும் இயேசு தங்களுக்குச் சொல்வதைச் செய்வார்களானால், நீங்கள் விசுவாசித்தால் மட்டுமே, உங்களுக்கு என்ன தேவையோ அதை அவர் பெற்றுக்கொள்வார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கும் போது, கர்த்தர் தமது ஆசீர்வாதங்களை இப்போது கூட்டுவாராக. சரி. பில்லி சற்று நேரத்திற்கு முன்பு அங்கு படிக்கட்டுகளில் என்னை சந்தித்தார் என்று நான் நம்புகிறேன், மேலும் A-50 முதல் நூறு வரை ஜெப அட்டைகளைக் கொடுத்ததாகக் கூறினார். வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப் போம். எங்களால் முடிந்தவரை நாங்கள் உங்களை நீண்ட நேரம் காக்க வைக்க மாட்டோம். ஒருவேளை இந்த வாரத்தில் சிறிது நாட்களுக்குப் பிறகு, கொஞ்சம் குளிராகும். அதன்பின்பு நம்மிடம் உள்ள அனைத்தையும் கொண்டு அதை இன்னும் தீவிரமாகச் செய்வோம். ஜெபத்தில் இருப்போம். 5 தேவன் இன்றிரவு ஜெபத்தைக் கேட்டு பதிலளிப்பார் என்று இங்குள்ள எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஓ, அது அற்புதமாக இல்லையா? சகோதரர் லிண்ட்சே, அங்கு ஒவ்வொரு நபரும் விசுவாசிப்பதை-விசுவாசிக்கும் தளத்தில்-உறுதியான ஒரு தளத்தைக் காண்பது மிகவும் நன்றாக இருந்தது. எதுவும் நடக்கலாம். இப்போது, நான் உங்களைச் செய்யச் சொல்லும் ஒரே காரியம் என்னவென்றால்... இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இங்கேயே நம் மத்தியில் தம்மை வெளிப்படுத்துகிறார் என்ற விசுவாசம் எத்தனை பேருக்கு இருக்கிறது? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார், "ஆமென்" என்று கூறுகிறார்கள்] சரி, இப்போது, உங்களிலுள்ள விசுவாசமெல்லாம், அதனோடு சில கிரியை களையும் சேர்த்தாலன்றி எந்த நன்மையும் செய்யாது. அது சரியா? நீங்கள் இப்போது சொல்ல வேண்டும், "நான் அதை விசுவா சிக்கிறேன். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதுவே அதைத் தீர்மானிக்கிறது. இதோ நான் இருக்கிறேன்." புரிகிறதா? அவ்வளவுதான். அது-அது முழு காரியத்தையும் தீர்மானித்து விடுகிறது. சரி. 6 ஒரே நேரத்தில் அதிகப்படியானோரை நாம் அழைக்க வேண்டாம். வழக்கமாக நாம் ஐம்பது அல்லது நூறு பேரை இங்கு பெறுகிறோம், அவர்கள் வரிசையில் நின்று மிகவும் சோர்வடைகிறார்கள். நாம் எடுத்துக்கொள்வோம்... A-50 ஜெப அட்டை யாரிடம் உள்ளது? உங்கள் கையைப் பார்ப்போம். ஜெப அட்டை A-50? அந்த சிறிய அட்டையின் பின்புறம் பாருங்கள், அதில் ஒரு எண் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அதன் முன்புறம் உங்கள் பெயர் இருக்கும். A-50? அது இங்கே இருக்கிறதா? அதை வைத்திருப்பவர்கள் உங்கள் கையை உயர்த்துங்கள். A-50? 51? நான் தவறான எழுத்தைப் பெற்றுவிட்டேன் என்று நினைக்கிறேன் ஒருவேளை... 51, ஜெப அட்டை A-51 யாரிடம் உள்ளது? 52? உங்களால் முடியும் போது சீக்கிரம் கையை உயர்த்துங்கள். 52, 53, 54, A-55, 56, 57, 58, 59, 60? மகனே, நீ 'A' அட்டைகளைக் கொடுத்தாயா? என்ன சொன்னாய்? ஓ, அவர்கள் தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள்... சரி. நான் நினைத்தேன்... நானே கைகளைப் பார்க்க வில்லை; என்னை மன்னியுங்கள். சரி. நான்-நான் A-50 இல் ஆரம்பித்தேன். ஆம். எனக்கு A-50, A-51, 52 என கீழே கிடைத்தது. எனக்கு இப்போது அறுபது வரை கிடைத்துள்ளது. இப்போது நாம் எதைப் பெற்றோம் என்று பார்ப்போம், 60. இப்போது, நீங்கள் உங்கள் இடங்களுக்குச் செல்லுங்கள். 7 உங்களுக்குத் தெரியுமா, எனக்குத் தெரிந்த வரையில், இங்கு வலதுபுறம் அமர்ந்திருக்கும் இந்த அம்மையாரைத் தவிர, தேவன் குணமாக்காத முடமான நபராக இந்த கட்டிடத்திற்குள் வந்த ஒருவர் மட்டுமே எனக்குத் தெரிந்து இருந்ததற்காக நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நான் கவனித்திருக்கிறேன். அவளுக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியும். மேலும் என்ன நடந்தது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அவள் எப்போது சுகமாவாள் என்ற நேரத்தைக் காண நான் காத்திருக்கிறேன், அதன் பிறகு நான் அவளை அழைப்பேன். ஏனென்றால் அவள் உண்மையுடன் வந்துகொண்டிருக்கிறாள். அங்கே ஒரு சிறுமி அமர்ந்திருக்கிறாள். ஆனால் கட்டில்கள், ஸ்ட்ரெச்சர்கள், மற்றும் முடமானவர்கள், எல்லாமே குணமடைந்து கூட்டத்திலிருந்து வெளியே நடந்து சென்றுள் ளனர். இது ஆச்சரியமாக இல்லையா? அவர்கள் கொண்டு வந்த ஒவ்வொருவரும்... சரி. 8 இப்போது, நாம் எதைப் பெற்றோம், ஐம்பது வரையா? அறுபது வரை என்று நான் நம்புகிறேன், அப்படித்தானே? சரி. நாம்-நாம் எழுபதுக்குச் செல்வோம். எழுபத்தைந்து, நாம் அதை அப்படி செய்வோம்: A-50 முதல் 75 வரை, பார்ப்போம்... வரிசையில் அதிகமா னோரைக் கொண்டு வர வேண்டாம். சில நிமிடங்களில் ஒருவேளை நாம் இன்னும் சிலரைப் பெறலாம். கிறிஸ்தவ அன்பில் நம் இதயங்களை பிணைக்கும் பந்தம் ஆசீர்வதிக்கப்படுவதாக; ஒருமித்த மனதின் ஐக்கியம் பரலோகத்தில் உள்ளதைப் போன்றது. நமது பரஸ்பர துயரங்களை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம், நமது பரஸ்பர சுமைகளைச் சுமக்கிறோம்; அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிதாப கண்ணீர் வழிகிறது. நாம் பிரியும் போது, அது நமக்கு உள்ளான வேதனையை அளிக்கிறது; ஆனால் நாங்கள் இன்னும் இதயத்தில் இணைக்கப்பட்டிருப்போம், மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறோம். அந்தப் பழைய பாடல்களை நீங்கள் நேசிக்கவில்லையா? இதுபோல... என் இரட்சகர் மரித்த சிலுவையின் கீழே, பாவத்திலிருந்து சுத்திகரிப்பிற்காக நான் அங்கே... அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கு மகிமை! மகிமை... ஜெப அட்டை எண் 70 வெளியே உள்ளது என்று அவர் கூறுகிறார். ஜெப அட்டை A-70... அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கு மகிமை! ஓ, அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கு மகிமை! 9 ஜெப அட்டை 70-ஐ வைத்திருக்கும் யாராவது... உங்களுக்கு அருகில் அமர்ந்தி ருப்பவரை நீங்கள் சரிபார்ப்பீர்களா? அது காதுகேளாத ஒருவராக இருக்கலாம். A-70, அவர்கள் கட்டிடத்தில் இருந்தால், ஏன், நாங்கள் அடுத்த சரணத்தைப் பாடும்போது நீங்கள் வந்து உங்கள் இடத்தை எடுத்துக்கொள்ளலாம். நான் பாவத்திலிருந்து ஆச்சரியமாக இரட்சிக்கப்பட்டேன், இயேசு உள்ளே மிகவும் இனிமையாகத் தங்கியிருக்கிறார், அவர் என்னை ஏற்றுக்கொண்ட சிலுவையினருகே; ஓ, அவருடைய நாமத்திற்கு மகிமை! அவருடைய (விலையேறப்பெற்ற) நாமத்திற்கு மகிமை! ஓ, அவருடைய (விலையேறப்பெற்ற) நாமத்திற்கு மகிமை! அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய... மகிமை 10 அந்த அனைத்து சிறு துண்டுப் பாடல்களுக்காகவும் இந்தப் பாடல்களை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். அவைகள் அற்புதமானவை என்று நான் நினைக்கிறேன். "அவருடைய நாமத்திற்கு மகிமை," என்ற-என்ற பல்லவியை மட்டும் பாடுவோம். உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒருவருடன் கைகுலுக்குங்கள், செய்வீர்களா? அப்படியே திரும்பி அல்லது ஏதாவது செய்து கைகுலுக்குங்கள். இப்போது வாருங்கள். அவருடைய (விலையேறப்பெற்ற) நாமத்திற்கு மகிமை! அவருடைய (விலையேறப்பெற்ற) நாமத்திற்கு மகிமை! ஓ, அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய... மகிமை எங்கள் பரம பிதாவே, "அவருடைய நாமத்திற்கு மகிமை" என்று இன்றிரவு எங்களால் பாட முடிகிற உம்முடைய ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி செலுத்து கிறோம். ஏனென்றால் சிலுவையில்தான் அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். தகுதியற்ற வர்களாக, ஒன்றுமில்லாதவர்களாக, நிர்வாணமா னவர்களாக, நிர்ப்பந்தமானவர்களாக, ஆவிக் குரிய விதத்தில் பேசப்போனால் குருடர்களாக வந்த எங்களை, தேவன் தமது கனிவான இரக்கத்தினால் கீழே இறங்கி வந்து எங்களை... தம்மை விட்டு அந்நியர்களான எங்களை ஏற்றுக்கொண்டார். மேலும் தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நம் பாவங்களிலிருந்து நம்மை சுத்திகரித்து, இப்போது தம்முடன் உன்னதங் களிலே நம்மை நிலைநிறுத்தியிருக்கிறார். 11 இப்போது நாம் தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகளாக இருக்கிறோம், ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் சுதந்தரவாளிகளாக இருக்கிறோம், உன்னதங் களில் அமர்ந்திருக்கிறோம், பரிசுத்த ஆவியா னவர் நம் மீது அசைவாடுகிறார். ஓ, அந்தப் பழைய காலத்துப் பாடல்களை நாம் கேட்கும்போது நம் இதயங்கள் நடுங்குவதில் ஆச்சரியமில்லை. அது உமக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக எங்களை ஆக்குகிறது, ஆண்டவரே. நன்றி. இந்தப் பழைய பாடல்களை எழுதியவர்கள் இன்றிரவு உம்மோடு இருக்கிறார்கள் என நான்... ஒருவேளை இருக்கலாம். அவர்கள் மீண்டும் சரீர ரூபம் எடுக்கும்வரை தேவன் அவர்களின் வீரம்மிக்க ஆத்துமாக்களை இளைப்பாறச் செய்வாராக. ஆண்டவரே, நாங்கள் அவற்றைப் பாடும்போது, அவை எதற்காகப் பாடப்பட்டன என்பதை உணர எங்களுக்கு உதவுங்கள். பிதாவே, இன்றிரவு எங்களுக்கு கிருபையையும், பரிசுத்த ஆவியின் வல்லமையையும் தாரும். மேலும் இப்போது, அனைத்து சந்தேகங் களையும் அது இருந்தது போலவே மூடிவிடும்; அதை இந்தக் கட்டிடத்தை விட்டே மூடி வெளியேற்றும், ஆண்டவரே. விசுவாசம் எழும்பி தன் இடத்தை எடுக்கட்டும், மேலும் இன்றிரவு அது மிகவும் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கட்டும். பொல்லாத ஆவிகள் மக்களை விட்டு நீங்கட்டும், மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி உண்டாகட்டும், ஏனெனில் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12 நாம் அதை ஒருமுறை முணுமுணுப்போம், செய்வீர்களா? [சகோதரர் பிரன்ஹாம் முணுமுணுக்கிறார்: "அவருடைய நாமத்திற்கு மகிமை"] ஓ, நான் அதை எவ்வளவு நேசிக்கிறேன். கௌபாய் அதை வாசித்தபோது, என் இதயத்தைத் தொட்ட முதல் பாடல்களில் அதுவும் ஒன்று. [சகோதரர் பிரன்ஹாம் மீண்டும் முணுமுணுக்கிறார்.] அவருடைய நாமத்திற்கு மகிமை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு நமது அனைத்திற்காக இயேசு கிறிஸ்துவை நம்பி, அவர் நம்முடன் இருக்கிறார் என்று விசுவாசித்து, அவர் நமக்கு உதவுகிறார் என்று விசுவாசித்து, அவர் மீதான நமது விசுவாசத்தை ஊக்குவிக்க அவருடைய பெரிய அன்பினாலும் இரக்கத்தினாலும் முயற்சிக் கிறோம். அதுவே எங்களின் ஒரே மாற்று: தேவன் எங்களை அனுமதிக்கும் வகையில், மக்களிடத்தில் தயவுபெற முயற்சிப்பது, இதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அதிகமாக விசுவாசிப்பதற்கு அவர்களுடைய விசுவாசம் உயர்த்தப்படக்கூடும். நாம் அந்நியர்கள். எனக்கு உங்களைத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம். கடிதம் அல்லது தபால் மூலமாகவோ, அல்லது பிரசங்க மேடையில் எங்கேயாவது என்னைப் பார்த்தாலோ தவிர. ஆனால் தேவன் நம் இருவரையும் அறிவார். மேலும் நாம் ஒருவரையொருவர் பற்றி எதையும் அறிந்து கொள்வது முற்றிலும் சாத்தியமற்றது என்பதை அறிவேன், ஒருவேளை என்னைப்பற்றி நீங்கள் அதிகமாக அறிந்திருக்கலாம், ஏனென்றால் நீங்கள் செய்தித்தாள்கள் மற்றும் பலவற்றைப் படித்திருக்கலாம்... ஆனால் நான் உங்களை அறிவது என்பது... 13 இப்போது, நீங்கள் ஒரு ஆரோக்கியமான பெண்ணைப் போலத் தெரிகிறீர்கள். மேலும் எனக்குத் தெரிந்தவரை நீங்கள் அப்படி யிருக்கலாம். அது... அது தேவனுக்குத் தெரியும்; எனக்குத் தெரியாது. ஆனால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இன்றிரவு நம்முடன் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார், மேலும் அவர் செய்த காரியங்களை நாமும் செய்வோம் என்று நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். உங்களுக்குத் தெரியுமா, அவர் யாரையும் குணமாக்கவில்லை. அவர் சுகமாக்கவில்லை என்று அவர் கூறினார். இல்லை. அவர், "பிதாவே அதைச் செய்கிறார்" என்று கூறினார். அது சரியா? ஆனால் அவர்-அவர் அவர்களின் இதயங்களை அறிந்திருந்தார், அவர்களின் எண்ணங்களை அறிந்திருந்தார். மேலும் அவர், "பிதா எனக்குக் காண்பிப்பதை மட்டுமே நான் செய்கிறேன்" என்றார். பெதஸ்தாவில் உள்ள அந்த முடவர்கள் அனைவர் மத்தியிலும் அவர் நடந்து செல்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மேலும் தலையில் நீர் கோர்த்த அந்தப் பாவப்பட்ட சிறிய குழந்தைகளையும், முடவர்களையும், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களையும், கைகால் இழுத்துக்கொண்டவர்களையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் அவர்களில் ஒருவரையும் தொடவில்லை. 14 நேராக நடந்து சென்றார், அந்த மனுஷனின் நிலை அவ்வளவு மோசமாக இல்லை. அவனுக்கு சுமார் முப்பத்தெட்டு வருடங்களாக புரோஸ்டேட் பிரச்சனையோ அல்லது வேறு ஏதாவது இருந்திருக்கலாம். அவன் ஒரு பாயில் படுத்திருந்தான். இயேசு அவனைக் குணமாக்கினார். பிறகு அந்த கட்டிடத்திலிருந்து நேராக நடந்து வெளியே சென்றார். ம்ம்ம். ஆனால் அவர் அன்பும் மனதுருக்கமும் நிறைந்தவர் என்று அவர்கள் கூறினார்கள். அவருடைய அன்பு அப்படிப்பட்டதல்ல... அது பிதாவின் மீது இருந்தது. பிதா எப்படி அனுமதிப்பாரோ, அதன்படி அவர் செய்வார். 19-வது வசனத்திலும் அவர் அதே காரியத்தைச் சொன்னார், உங்களுக்குத் தெரியுமா. அவர் கூறினார், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், குமாரன் தாமாயொன்றும் செய்யமாட்டார். பிதா செய்கிறதை அவர் காணுகிறதெதுவோ, அதையே குமாரனும் அதேவிதமாய்ச் செய்கிறார்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிதா தமக்குக் காண்பிப்பதை மட்டுமே அவர் செய்கிறார். இப்போது, இன்றிரவு பிதா... இப்போது, உங்கள் சுகமளிப்பைப் பொறுத்தவரை, பிதா அதை இன்றிரவு தமது மகிமையில் ஏற்கனவே வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆம். ஏனென்றால், அவர் இயேசுவைக் கொடுத்தபோது, அது உங்களின் சுகமளிப்பை விலைக்கு வாங்கிவிட்டது. 15 இப்போது, பிதா செய்யக்கூடிய ஒரே காரியம்... மேலும் அவர் தமது வார்த்தையை அனுப்பினார். சகோதரர் பாக்ஸ்டர் அதை இன்றிரவு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் பிரசங்கித்தார். இப்போது, வேறு ஏதாவது செய்ய முடியுமானால், சபையில் வரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அது சரியா? அதன்பின்பு அதன் மூலமாக, தேவன் கீழிறங்கி வருகிறார், அவருடைய அன்பு மற்றும் இந்த வார்த்தையின் செய்தியைத் தவிர, வெவ்வேறு காரியங்களைச் செய்யும் வரங்களை அவர் சபையில் வைக்கிறார். இப்போது, சபையில் ஒரு வரம் உள்ளது... பவுல் சொன்னார் என்று நான் நம்புகிறேன், "நீங்கள்-நீங்கள் அனைவரும் அந்நிய பாஷைகளில் பேசுகையில் கல்லாதவர்கள் உள்ளே வந்தால், ஏன், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்துள்ளவர்கள் என்பார்கள்." ஆனால் அவர் சொன்னார், "ஒருவன் தீர்க்கதரிசனம் சொல்லி, மக்களின் இரகசியங்களை வெளிப்படுத்தினால், அவர்கள் அனைவரும் சாஷ்டாங்கமாய் விழுந்து, 'மெய்யாகவே தேவன் உங்களுக்குள்ளே இருக்கிறார்' என்று சொல்லுவார்கள்." அது சரியா? 16 இன்றிரவு சபையில் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்களை வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்பதற்கு இதுவே போதுமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஆம். இப்போது, அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். அவர் அப்படியே இருக்கிறார்... நம்முடைய போதகரும்-கிணற்றருகே இருந்த ஸ்திரீயும் நின்று பேசிக்கொண்டிருந்ததைப்போல நாம் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது, நான் இதை ஒரு நோக்கத்திற்காகவே செய்கிறேன். அது உங்களுக்குத் தெரியும். அங்கே அநேக மக்கள் இருக்கிறார்கள், அநேக விசுவாசிகள் இருக்கிறார்கள். அங்கே சொல்லப்போனால் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்... நான் உங்களைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன். இப்போது, அந்த ஸ்திரீயிடம் ஒழுக்கக்கேடான தவறு எதுவும் இல்லை. நான் அவளிடம் ஒரு நிமிடம் பேசிக் கொண்டி ருந்தேன். அந்த மைக்ரோஃபோன் (ஒலிவாங்கி) உயிர்ப்புடன் இருப்பதை நான் அறிந்திருந்தேன். இப்போது, உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை தேவன் எனக்குக் காட்டக் கூடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அது எதுவாக இருந்தாலும் சரி, அது குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது அது-அது-அல்லது அது எதுவாக இருந்தாலும் சரி, வியாதியாக இருந்தாலும் அல்லது அது... நீங்கள் வெறும் ஆர்வத்துடன் இருந்தாலும், அல்லது அது எதுவாக இருந்தாலும், தேவனால் அதை வெளிப்படுத்த முடியும், அல்லவா? அவரால் முடியும். ஆம். அவரால் முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நல்லது. 17 ஆனால் நீங்கள் வெறும் ஆர்வத்தினால் மட்டும் இங்கே வரவில்லை, ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே வியாதியாக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சனை உங்கள் மார்பகத்தில் உள்ளது. உங்கள் மார்பகத்தில் உங்களுக்கு வலி இருக்கிறது. அந்த மார்பகத்தில் உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அதுதான் இதற்குக் காரணம். அது ஒரு கட்டி அறுவை சிகிச்சை அல்லது அதுபோன்ற ஒன்று. அது ஒரு-ஒரு மார்பகத்தில் இருந்த வளர்ச்சி, அதை அவர்கள் அகற்றிவிட்டார்கள். அது சரியா? இப்போது, அதுதான் என்றால்... தேவன் அதை வெளிப்படுத்த முடியும் என்றால்... இப்போது, என்ன... அது சரியாக என்னவாக இருந்தது? அது உங்கள்-ஒரு அறுவை சிகிச்சை அல்லது அதுபோன்ற ஒன்றைப் பற்றியது அல்லவா? ஏதோவொன்று... ஆம், ஆம். மார்பகம்...?... நல்லது. நல்லது. அது என்றால்... நாம் இருக்கிறதைப்போல மதிப்பற்ற ஒரு மாம்சத் துண்டின் மூலமாக தேவன் நின்று அதைச் செய்ய முடியுமானால், ஆம், அவர் சர்வவல்லவர், அல்லவா? ஆனால் அவர் ஒருமுறை ஒரு கழுதையின் மூலமாகப் பேசி ஒரு மனிதனிடம் ஏதோவொன்றைச் சொன்னார். மேலும் அவர்-அவர் ஒரு அக்கினி மேகத்தின் மூலமாகப் பேசினார். அவர் அநேக காரியங்களின் மூலமாகப் பேசினார்... ஒரு நிமிடம். 18 நீங்கள்... இதுமட்டுமல்லாமல், நீங்கள் மீண்டும் என்னை விட்டு விலகிப் போவதை, தூரப் போவதை நான் காண்கிறேன். உங்களுக்கு மிகவும் துக்கமான மற்றும் மனமுடைந்த இதயம் இருக்கிறது. நீங்கள்-நீங்கள் உங்கள் கணவரை இழந்துவிட்டீர்கள், இல்லையா சகோதரி? இயேசு கிறிஸ்து இப்போது இங்கே சமீபமாக இருக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அவரிடமிருந்து உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்களும் நானும் இணைந்து ஒரு வார்த்தை ஜெபிக்கலாமா? எங்கள் அன்பான பிதாவே, உம்முடைய இரக்கங்களுக்காகவும் கிருபைக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் அன்பான சகோதரிக்காக நான் இரக்கத்தை வேண்டுகிறேன். எல்லா தீமைகளும் அவளை விட்டு விலகுவதாக. அவளுடைய இதயம் களிகூர்ந்து மகிழ்வதாக. அவள் இன்றிரவு சுகமாகி, மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்குச் செல்வாளாக. இப்போது, அவளுடைய விசுவாசம் கிரியைகளுடன் இருக்கட்டும். அதை அருளுங்கள், ஆண்டவரே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. இப்போது, பாருங்கள் நாம்-நாம் முன்பின் தெரியாதவர்கள். இப்போது, அந்தக் காரியங்கள் எனக்கு ஒரு சொப்பனம் வந்ததுபோலத் தோன்றுகிறது. காண்கிறீர்களா? ஆனால் இப்போது என்ன சொல்லப்பட்டதோ, அது எதுவாக இருந்தாலும், அது உண்மையா? அது உண்மையாக இருந்தால், உங்கள் கையை உயர்த்துவதன் மூலம் கூடியிருக்கும் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அது உண்மையாகவே இருந்தது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, உலகத்தில் அதை நான் அறிந்துகொள்ள எந்த வழியும் இல்லை, அது சரியா? நாம் முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள். 19 இப்போது, இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை குணமாக்கினார், இப்போது அவள் சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லலாம். காண்கிறீர்களா? ஏன்? அவள்... என்று இருந்ததால்தான். இப்போது, நீங்கள் அப்படி இருக்கப் போகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சரியான மனநிலையோடு வந்திருக்கிறீர்கள். சரியான மனநிலையோடு கிறிஸ்துவிடம் வந்து, தாங்கள் கேட்டதைப் பெற்றுக்கொண்டு போகாமல் எவருமே இருந்ததில்லை: ஒருவரும் இல்லை. காண்கிறீர்களா? இப்போது, நீங்கள் செல்லுங்கள், நீங்கள் அப்... உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தேவனால் சொல்ல முடியுமானால், உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தேவன் நிச்சயமாக அறிவார், அது சரியா? நல்லது. இப்போது செல்லுங்கள். எல்லாவற் றையும் மறந்துவிடுங்கள். சந்தோஷமாக இருங்கள். நீங்கள் களிகூர்ந்து சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. வாருங்கள். அபிஷேகம் என்மீது மிகவும் ஆழமாக இறங்கி, நான்-நான் இவற்றை மறந்துபோவதற்கு முன்பாகவே, இந்த கடிதங்களுக்காக நான் இப்போதே ஜெபிக்க விரும்புகிறேன். இப்போது, பரலோக பிதாவே, இங்கே சில கடிதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கைக்குட்டைகள் இருக்கின்றன. அவை வியாதிப் பட்டவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் செல்லவிருக்கின்றன. நான் இரக்கத்திற்காக வேண்டுகிறேன், அன்பான தேவனே. நீங்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 20 மேலும் ஆண்டவரே, நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்பதை நான் உணருகிறேன். எங்களில் எந்த நன்மையும் இல்லை. ஆனால் இயேசு எங்களுக்கு என்ன கட்டளையிட்டாரோ அதை நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். ஓ, அதற்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். இப்போது, பவுலின் சரீரத்தி லிருந்து கொண்டுவரப்பட்ட கைக்குட்டை களையும் கச்சைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்றும், அசுத்த ஆவிகள் மக்களை விட்டுப் புறப்பட்டன என்றும், அவர்கள் வியாதிகளிலிருந்து குணமாக்கப்பட்டார்கள் என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல, ஆனால் நீர் இன்னமும் இயேசுவாகவே இருக்கிறீர். இப்போது, இந்த கைக்குட்டைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அனுப்பு கிறோம், இந்த கைக்குட்டைகள் தொடும் ஒவ்வொருவரும், தேவனுடைய மகிமைக் காகவும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகவும் குணமாக்கப் படுவார்களாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (இங்கே இன்னும் இரண்டு இருப்பதாக நினைக்கிறேன், சகோதரரே. ஓ, அவை... ஆம், ஐயா. நல்லது.) மாலை வணக்கம், ஐயா. உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமா வோடும் கர்த்தராகிய இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிறீர்களா? நம்முடைய அன்பான அருமையான கர்த்தராகிய இயேசு தமது அபிஷேக வல்லமையில் இறங்கி வந்து, நீங்கள் எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களோ-அதை வெளிப்படுத்துவாரானால், நீங்கள் எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களோ அதுதான் உங்கள் இருதயத்தில் இருக்கும் முக்கிய காரியமாக இருக்கும். அது... எதுவாக இருந்தாலும் சரி... அது என்னவாக இருந்தாலும் சரி, அவர்-அவர் தமது வல்லமையின் மூலம் அதை வெளிப்படுத்த முடியும் (அது சரியா?). அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதைக்குறித்து என்ன செய்ய வேண்டும் என்று அவர் உங்களுக்குச் சொன்னால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்ன பிரச்சனை அல்லது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர் வெளிப்படுத்தினால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மேலும் அவர் உங்களைச் செய்யச் சொல்வதை... அவருடைய தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அது சரியாக இருக்குமா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே, நான் ஜெபிக்கிறேன். நீங்கள் தாழ்மையுடன் வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். எதையாவது பெற்றுக் கொள்ளும் விதத்தில் நீங்கள் தேவனை அணுகுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 21 ஆம், ஐயா. உங்கள்-உங்கள் பிரச்சனை உங்கள் இருதயத்தில் உள்ளது. உங்களுக்கு ஒரு-ஒரு இருதய வீக்கம் இருக்கிறது. அது சரிதான். மேலும் உங்களுக்கு நீர்க்கோவை வியாதியும் இருக்கிறது, இல்லையா? வீக்கம், சில நேரங்களில் அது மிகவும் பெரிதாகிவிடும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்-தண்ணீரில் பிரிகிறது. அவர் கல்வாரியில் உங்களுக்காக மரித்தபோது அவர் உங்களைச் சொஸ்த மாக்கினார் என்று விசுவாசிக்கிறீர்களா? இப்போது நீங்கள், இந்த இடத்தில், இந்த கூட்டத்தின் முன்னிலையிலும் தேவனுக்கு முன்பாகவும் நின்றுகொண்டிருக்கும்போது, உங்களுடைய சுகத்திற்காக அங்கே இயேசு செய்த பிராயச்சித்தத்தை இப்போது நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் குணமடைவீர்கள் என்றும் அந்த இருதயம் சாதாரணமாகக் குறையும் என்றும் விசுவாசிக்கிறீர்களா? அதை உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசித்தால், இந்தக் கூட்டம் முடிவடைவதற்கு முன்பாகவே, உங்கள் இருதயம் சுருங்கிவிட்டது என்றும் உங்கள் நீர்க்கோவை உங்களை விட்டு நீங்கிவிட்டது என்றும் ஒரு-ஒரு டிக்கெட்டை இங்கே இந்த மேஜையில் வைப்பீர்கள். இதை உங்கள் முழு இருதயத்தோடும் செய்வீர்களா? ஓ தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த மனிதன் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பி, இதை நிறைவேற்றும், ஏனென்றால் இந்த இருதய நோயை, இந்த வீக்கத்தை, அவரிடம் உள்ள எந்தக் குறையையும் நான் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது அவனை விட்டு நீங்குவதாக. இந்த மனிதனை விட்டு வெளியே வா. ஆமென். இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துப் போங்கள், சகோதரரே. தேவன் உங்களைச் சொஸ்தமாக்குவார். இப்போது ஜெபத்தில் இருங்கள். நல்லது. 22 தயவுசெய்து வாருங்கள். சகோதரி, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்... நாம் தேவனிடம் கேட்டால்... இப்போது, நான் மட்டும்தான் ஜெபிக்கிறேன் என்று இல்லை, என் சகோதரி, அந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் ஜெபிக்கிறார்கள். மேலும்-மேலும் இங்கே பின்னால் இருப்பவர்கள், இவர்கள் அனைவரும்-இவர்கள் ஊழியக்காரர்கள், அனைவரும் இருக்கிறார்கள், அவர்கள் காத்திருக்கிறார்கள், ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் நீங்கள் குணமடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாம் தேவனிடம் கேட்கும்போது, நீங்கள் குணமடைவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? நல்லது இப்போது, உங்கள் விசுவாசத்தைத் தூண்டுவதற்காக ஒன்றைச் சொல்கிறேன். நான் ஒன்றில்-ஒன்றில், இங்கே வந்து ஒரு வேதவசனத்தை மேற்கோள் காட்ட முடியும், அல்லது நான் ஒரு சாட்சியைச் சொல்ல முடியும், அல்லது ஒருவேளை தேவன் இறங்கி வந்து-வந்து ஏதோவொன்றை வெளிப்படுத்தக் கூடும். அவர் எதைச் செய்தாலும், நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள், அல்லவா? நீங்கள் இருப்பீர்கள். 23 மேலும் இன்றிரவு அந்தப் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு அது ஒரு-ஒரு-போதுமான சான்றாக இருக்குமா, நீங்கள் குணமடையப் போகிறீர்கள் என்பதற்கு அது உங்களுக்குப் போதுமான சான்றாக இருக்குமா? அது இருக்கும். உங்களுக்கு என்ன-உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், அது நீங்கள்-நீங்கள்-நீங்கள் குணமடையப் போகிறீர்கள் என்பதற்கு உங்களுக்குப் போதுமான சான்றாக இருக்குமா? உங்கள் பிரச்சனை உங்களுடைய இரத்தத்தில் இருக்கிறது, அதுதான் உண்மை, ஏனென்றால் உங்களுக்கும் எனக்கும் இடையில், இரத்தத் துளிகள் இருக்கின்றன... அது வெண்மையாகத் தெரிகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருக்கிறது. அது சரியா? அது உண்மையா? அப்படியானால் இங்கே வாருங்கள். சகோதரி, விசுவாசக் கண்களினால் நாம் அங்கே கல்வாரிக்கு நேராகப் பார்ப்போம். மேலும் இன்றிரவு விசுவாசத்தினால் ஒரு இரத்தமேற்றுதலைச் செய்ய, இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து புறப்பட்டு வந்த, போதுமான இரத்தம் அங்கே இருந்தது. 24 ஓ தேவனே, இந்தப் பரிதாபமான சிறிய ஸ்திரீயின் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே, நாங்கள் இந்த பூமியின் சிருஷ்டிகளாக மட்டுமே இருக்கிறோம், ஒரு-முயற்சி செய்து, உமக்குச் சேவை செய்ய எங்களால் முடிந்தவரை வாழ முயற்சிக்கிறோம். நான் இந்த ஸ்திரீயின் மீது கைகளை வைக்கும்போது, ஒரு தூதனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின்படி, "நீ ஜெபிக்கும்போது உண்மையாக இருந்து, மக்களை விசுவாசிக்கச் செய்தால், உன் ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்காது" என்று சொன்னபடியே நான் ஜெபிக்கிறேன். மேலும் அவரை அனுப்பின மகா தேவனே, நான் இந்தச் சிறிய ஸ்திரீயின் மீது என் கைகளை வைத்து, அவள் இந்த நிலையிலிருந்து குணமாக்கப்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கும்போது, இப்போது அவர் தம்முடைய வார்த்தையைத் தொடரும் அடையாளங்களினாலே உறுதிப் படுத்துவாராக. ஆமென். இப்போது, அன்பான சகோதரி, தேவன் சொன்ன இடத்தில் உங்கள் விசுவாசம் சரியாக இருக்குமானால், நீங்கள் சுகமடைவீர்கள் என்று என் முழு இருதயத்தோடும் நான் நம்புகிறேன். அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். நீங்களும் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது, உங்கள் வழியில் எதுவும் நிற்க முடியாது. இப்போது, வெறும்... ஏவியர்களையும் மற்றவர்களையும்... துரத்திவிடுவதைப் பற்றி நேற்றிரவு நான் பேசிக்கொண்டிருந்தபோது நீங்கள் இங்கே இருந்தீர்களா? காண்கிறீர்களா? இப்போது அவர்களை வழியை விட்டு அகற்றிவிட்டு, சுகமடைந்ததற்காக தேவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் உங்களிடமிருந்து செய்தியைக் கேட்க விரும்புகிறோம். நல்லது. 25 "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. (யாரோ சகோதரர் பிரன்ஹாம் அவர்களிடம் பேசுகிறார்கள்) (ஆம், ஐயா. சரி, அது நல்லது. நீங்கள்... நான் நகர்ந்தால், நீங்கள் என்னை மீண்டும் பழைய இடத்திற்குக் கொண்டு வாருங்கள், ஏனென்றால் நான்-நான் அதை மறந்துவிடுவேன், நீங்கள் அப்படிச் செய்வீர்களானால்.) எப்படி இருக்கிறீர்கள், சகோதரி? அந்த நீரிழிவு நிலையிலிருந்து நீங்கள் விடுபட்டு, வீட்டிற்குச் சென்று, நலமாகி, மீண்டும் சுகமடைய விரும்புகிறீர்களா? நீங்கள் அப்படிச் செய்ய விரும்புகிறீர்களா? ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். ஓ ஆண்டவரே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தப் பரிதாபமான சிறிய தாயின் சுருங்கிப்போன சிறிய கைகளைப் பார்க்கும்போது, கூட்டத்தில் அங்கே அமர்ந்திருக்கும் என் சொந்தத் தாயை நான் நினைத்துப் பார்க்கிறேன். மேலும், ஆண்டவரே, சந்தேகமே இல்லை, இது அழும் பல குழந்தைகளின் முகங்களிலிருந்து கண்ணீரைத் துடைத்திருக்கிறது, அநேகமாக பல நாட்கள் துணி துவைத்திருக்கிறது. 26 ஓ தேவனே, ஒருவேளை இந்தப் சிறிய வயதான விரல்கள் பைபிளைப் புரட்டி, வாக்குத் தத்தங்களை வாசித்திருக்கலாம், இப்போது சாத்தான் அவளுடைய வாழ்க்கையைத் தன்னால் முடிந்தவரை மிகவும் பரிதாபகரமானதாக மாற்ற முயற்சிக்கிறான். ஆனால் இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தினால் நாம் அவனை எதிர்த்து நிற்கிறோம். இப்போது, சாத்தானே இந்த ஸ்திரீயை விட்டு விலகு, நாங்கள் அவள் மீது கைகளை வைத்து, தேவனுடைய வார்த்தை உண்மை என்றும், நீ ஒரு பொய்யன் என்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ தோற்கடிக்கப்பட்டுவிட்டாய் என்றும் எங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம். ஆமென். இப்போது, சகோதரி, செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்களுடன் இருப்பதாக. ஏனென்றால் நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ... ஓ, ஆச்சரியம். நல்லது, சகோதரி, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை விசுவாசித்தால், உங்கள் கண்கள் ஒருபோதும் பார்வையிழக்காது, நீங்கள் குணமடைவீர்கள், நீங்கள் நலமாகிவிடுவீர்கள். அதுதான் இன்றிரவு உங்களுடைய முக்கிய எண்ணமாக இருக்கிறது. நிச்சயமாக உங்கள் வயதிலுள்ள ஒரு பெண்ணுக்கு இருக்கும் மற்ற பல காரியங்களும் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் உங்கள் கண்களுக்கு இருப்பவற்றுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை. உங்கள் கண்கள் மிகவும் மோசமாகி வருவதால் அதுவே உங்களுடைய முக்கிய விஷயமாக இருக்கிறது. நீங்கள்-ஒருவேளை குருடாகிவிடலாம் என்பது போல் தோன்றுகிறது. 27 ஆனால் அந்த மனிதனுடைய கண்களில் களிமண்ணைப் பூசினார் அல்லவா, அவரை நோக்கிப் பார்ப்போம். அவர் தரையிலே துப்பினார். அவர் பேசிக்கொண்டு நின்றபோது, தரையிலே துப்பிக்கொண்டிருந்தார். பின்பு அவர் அந்தச் சேற்றையும் உமிழ்நீரையும் எடுத்து, அதைத் தன் கைகளில் தேய்த்து அவனுடைய கண்களில் பூசினார். இன்றைக்கு உள்ள சுகாதார அதிகாரிகள் அதைப் பற்றி என்ன சொல்வார்கள்? காண்கிறீர்களா? ஆனால் அது இயேசு கிறிஸ்துவாக இருந்தார். அந்த மனிதன் அவர் செய்ததை... அவர் தன்னைச் செய்யச் சொன்னதைச் சரியாகக் கீழ்ப்படிந்து, பார்வையடைந்து திரும்பி வந்தான். அது சரியா? இப்போது, அவர் என்ன செய்யச் சொன்னாரோ அதற்கு நீங்கள் சரியாகக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களுடையதைப் பெற்றுக்கொள்வீர்கள், நீங்கள் சுகமடைவீர்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, அன்று இரவு அந்தச் சிறிய கட்டிடத்தில் நின்று கொண்டிருந்தபோது, தரையின் குறுக்கே அந்த வெளிச்சம் வீசியபோது, ஒரு பெரிய வல்லமையான ஜீவன் அந்த வெளிச்சத்திற்குள் நடந்து வந்தபோது, நான் நடுக்கமுற்று, ஒருவேளை என் நேரம் வந்துவிட்டதோ என்று நினைத்தேன். ஆனால் வியாதிப்பட்ட வர்களுக்காகப் போய் ஜெபிக்கும்படி நீர் சொன்னீர். எனக்குத் தெரிந்தவரை எவ்வளவு உண்மையோடு செய்ய முடியுமோ அவ்வளவு உண்மையோடு நான் அதை இன்றிரவு செய்துகொண்டிருக்கிறேன், ஆண்டவரே. 28 உம்முடைய நாமத்தில் நான் ஆசீர்வதிக்கும் இவரை ஆசீர்வதியும், குருட்டு ஆவி இவளை விட்டு நீங்குவதாக. இவள் சுகமடைவாளாக. நான் இந்த ஆசீர்வாதத்தை இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், மேலும் ஆண்டவரே, இவளுடைய விசுவாசம் குறைந்துபோகாமல், அவள் கண்ணாடிகளோ அல்லது வேறு எதுவோ பயன்படுத்தத் தேவையில்லாத அளவிற்கு, இயேசுவின் நாமத்தில் முற்றிலும் சுகமடைந்து, மிகுந்த சந்தோஷத்துடனும் பரிசுத்த ஆவியின் நிறைவுடனும் இந்த மேடையை விட்டுச் செல்ல வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தாயே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது, நீங்கள் வருகிறீர்களா ஐயா? விசுவாசம் இருக்கிறதா? இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா. நல்லது. இப்போது அதைச் செய்யுங்கள். மகனே, இந்த வயிற்றுப் பிரச்சனை யிலிருந்து விடுபட்டு, நீ சுகமடைய விரும்புகிறாயா? நீ விரும்புவாயா? தேவனுடைய வார்த்தை சரியானது என்று விசுவாசிக்கிறாயா? இன்றிரவு செய்யப்பட்ட பிரசங்கம் சரியானது என்று விசுவாசிக்கிறாயா? உன்னால் காபி மற்றும் அதுபோன்ற பொருட்களைக் குடிக்க முடியாது என்பதை அறிந்த-அங்கே கண்ட ஒரு தெய்வீக வரத்தின் மூலம் நான் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறேன் என்று விசுவாசிக்கிறாயா. அது உன் வயிற்றில் புளித்துப்போய், அமில நிலை ஏற்படுவதால், நீ அதைத் தள்ளிவைக்க வேண்டியிருக்கிறது அல்லவா? அது சரியா? ஏப்பம் வருகிறது. உன் பற்கள் அனைத்தும் கூசுகின்றன. சில நேரங்களில் நீ வெளியே சென்று, சாப்பிட்டதை வாந்தி எடுக்க வேண்டியிருக்கிறது. அது சரியா? முற்றிலும் சரி. 29 இப்போது, இதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியானவர் இங்கே நின்றுகொண்டிருந்தால், என்னை அவருடைய ஊழியக்காரனாக நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் இங்கிருந்து வெளியே சென்று அந்தக் காரியத்தைக் கைவிட்டு, வெறும்-அதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, களிகூர்ந்து, சந்தோஷமாக வெளியே சென்று, சாப்பிடுவீர்களானால்... நீங்கள் எப்படி உணர்ந்தாலும், எப்படி இருந்தாலும் சாப்பிடுங்கள், ஒரு... சிறிது நேரம் கழித்து, உங்களுக்கு எந்த வயிற்றுப் பிரச்சனையும் இருக்காது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? ஆண்டவரே, இது நிறைவேறுவதாக; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைக் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே. இப்போது செல்லுங்கள், நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடுங்கள், விசுவாசமாயிருங்கள். ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வரும்போதே, அப்படி நடந்து வரும்போதே, நீங்கள் இங்கே வந்தவுடனும் உங்களுக்காக ஜெபித்தவுடனும் தேவன் உங்களைச் சொஸ்தமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? ஆம், எனக்கு உங்களைத் தெரியும்; உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் நான்-நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். அது அப்படிச் செய்யும் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? நல்லது, இங்கே வாருங்கள். 30 ஓ சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனின் அதிபதியே, ஒவ்வொரு நல்ஈவையும் அளிக்கிறவரே, இந்த மனிதன் மீது உமது ஆசீர்வாதங்களை அனுப்பும். இப்போது இவனுடைய நரம்புகள் அமைதியடைவதாக. பிதாவே, இவன் இங்கிருந்து மேடையை விட்டு இறங்கி, சுகமடைவானாக. இயேசு கிறிஸ்துவே முற்றிலும் போதுமான பலி என்பதை இவன் அறிந்துகொண்டு, இப்போதே இவன் இயேசுவை ஏற்றுக்கொள்வானாக. தேவன் யெகோவா-யீரேயாக இருக்கிறார், "கர்த்தர் தமக்கென்று ஒரு பலியைப் பார்த்துக் கொள்வார்." இப்போது அந்தப் பலி கொடுக்கப்பட்டுவிட்டது. எங்கள் சகோதரன் அதை விசுவாசத்தினால் ஏற்றுக்கொண்டு, கிரியைகளினால் அதைச் செயல்படுத்துவானாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இப்போது, "ஆண்டவரே, உமக்கு நன்றி" என்று சொல்லிக்கொண்டே, களிகூர்ந்து செல்லுங்கள். மேலும் சுகமடையுங்கள். நல்லது, வாருங்கள். அதை விசுவாசத்தினால் நம்புங்கள். கிரியைகளினால் அதைச் செயல்படுத்துங்கள். காண்கிறீர்களா? அதைப்போலச் செயல்படுங்கள். உங்களுக்குத் தெரியுமா, நான் சொல்வது தவறாக இருக்கலாம்; நான் அப்படி இருந்தால், தேவன் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் நான் வியாதியாக இருந்து ஒரு மேடைக்கு நடந்து சென்றால், இந்த நபருக்கு நான் முன்பின் தெரியாதவன் என்று அறிந்திருந்தால். அந்த நபர் அதை விளக்கிச் சொல்லியிருந்து, வார்த்தை அவ்வளவு கவனமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தால். நான் அதைப் பார்த்து, அது எவ்வளவு அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு, அது முற்றிலும் அடிப்படையில் சுவிசேஷத்தின் சத்தியமாக இருக்கிறது என்று பார்த்தால். பின்பு பரிசுத்த ஆவியானவர் என் மீது போதுமான இரக்கம்கொண்டு, நான் என்ன கேட்கிறேனோ அதை அப்படியே எனக்கு வெளிப்படுத்தினால். உங்களுக்குத் தெரியுமா, நான் கத்திக்கொண்டே அந்த மேடையிலிருந்து குதிப்பேன் என்று நான் நம்புகிறேன். இப்போது, அது நான்தான். நான்... காண்கிறீர்களா? மேலும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கவில்லை என்றால், அந்த வரிசையில் ஒருபோதும் நிற்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் அப்படிச் செய்யாமல் இருப்பதே உங்களுக்கு நலம். 31 ஏனென்றால் வேதம் கூறுகிறது, "போ, இனிப் பாவஞ்செய்யாதே, இல்லையென்றால் அதிக கேடானதொன்றும் உனக்கு வரும்." பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்தி யிருக்கும்போது, இப்படியாக. நீங்கள் திரும்பிச் சென்று, "சரி, எனக்குத் தெரியவில்லை. அவர் அதை யூகித்திருக்கலாம். அது இருக்கலாம்..." என்கிறீர்கள். சகோதரனே, இது யூகிப்பது அல்ல. காண்கிறீர்களா? இல்லை. நீங்கள் அப்படிச் சென்றால், பிறகு வேறொன்று நடப்பதற்காகக் காத்திருங்கள். அதுதான் சரி. எனவே வரிசையில் வரக்கூட வேண்டாம். என்ன நடந்தாலும், வரிசையை விட்டு விலகியே இருங்கள். இந்தக் கிரியைகள் இயேசு கிறிஸ்துவிடமிருந்தே வருகின்றன என்று உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக் காவிட்டால். அப்படியே விலகியே இருங்கள். விசுவாசிக்கும் வேறொருவர் வரட்டும். காண்கிறீர்களா? என்னைப்பொறுத்தவரை, அதை அறிந்து கொள்வது உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான காரியமாக இருக்கும் என்று நான் நினைப்பேன்... எனக்குத் தெரியும், சில நேரங்களில் நான் ஏதாவதொன்றைக் கேட்கிறேன். அவர் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டுவார். நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் கேட்டுக்கொண்டிருந்த ஏதாவதொன்றை அவர் எனக்கு வெளிப்படுத்தும்போது, படுக்கை யறையில் இரட்சணிய சேனை (Salvation Army) வந்துவிட்டதாகச் சில சமயங்களில் என் மனைவி நினைக்கிறாள்... திடீரென்று நான் பார்க்கிறேன், அது எனக்கு முன்பாக நிற்கிறது. அது எனக்கு வெளிப்படுவதை நான் காண்கிறேன், நான் சத்தமிட்டு அழுவேன், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது. 32 மேலும், இது ஒரு அற்புதமான காரியம். நீங்களும் அதை விசுவாசிக்கிறீர்களா அம்மா? அந்தப் பெண்கள் சம்பந்தமான பிரச்சனை யிலிருந்து நீங்கள் விடுபட்டால், நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? சரி, "கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே சந்தோஷமாகச் சென்று அதிலிருந்து விடுபடுங்கள். ஆமென். நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. தேவனே, எங்களுக்கு இரங்குவீராக. ஆமென். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, அவர் நம்மேல் எவ்வளவு நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். அவர் ஆச்சரியமானவர் அல்லவா? சரி, அம்மா தயவுசெய்து வருகிறீர்களா. இப்போது விசுவாசம் வையுங்கள். சந்தேகப்படாதீர்கள். எல்லாவற்றையும் விசுவாசி யுங்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்பதைப் பெற்றுக்கொள்வீர்கள். 33 சகோதரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இப்போது, ஒருவேளை... இயேசு இங்கே இருந்து, இங்கே நின்று, இந்த கோட்டையும் அவர் எனக்குக் கொடுத்த பேண்ட்டையும் அணிந்திருந்தால், நீங்கள் விசுவாசிப்பீர்களா... அவர்-அவர் இங்கே நின்றிருந்தால், உங்களுக்கு என்ன-என்ன பிரச்சனை என்று அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இப்போது, பிதா தமக்குச் சொன்னதைத்தான் அவர் செய்ய வேண்டும். காண்கிறீர்களா? சரி, இப்போது, பிதா அவரிடம் இதைச் சொல்வார் என்று நான் விசுவாசிக்கிறேன், "குமாரனே, கல்வாரியில் நீர் அந்தப் பலியைச் செலுத்தியபோது, அந்தப் பெண்ணை நீர் குணமாக்கியது நினைவிருக்கிறதா." காண்கி றீர்களா? ஏனன்றால் அவர், "ஆம் பிதாவே. அப்படியானால், நான் ஒரு கட்டளையைக் கொடுத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் உலகத்தை விட்டுச் சென்றபோது, அவர்கள் உலகமெங்கும்போய் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்றும், வியாதியஸ் தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றும் சொன்னேன்" என்று கூறுவார். உரையாடல் இப்படியாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன், நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? 34 அப்படியானால், ஒருவேளை-ஒருவேளை அவர் இங்கே இருந்தால்... ஆனால் அவர் இப்போது தமது சபையின் மூலமாகச் செயல்படுகிறார்; நாம் அவருடைய சபையாக இருக்கிறோம். அவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் உங்கள்மேல் கைகளை வைத்தால், அந்த மூட்டுவலி (arthritis) எல்லாம் உங்களை விட்டு நீங்கி, உங்களால் கால்களைத் தட்டி நடக்கவும் வீட்டை நோக்கி ஓடவும் முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அது உங்களை விட்டு நீங்குவதாக. இப்போது, வாருங்கள். உங்கள் கால்களை மேலே தூக்கி கீழே குதியுங்கள். அதுதான் சரி. இப்போது பாருங்கள், அது எல்லாம் போய்விட்டது. அப்படியே போங்கள்... "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. நீங்களும் இருந்திருந்தால் இதே போல விசுவாசிப்பீர்களா...? ...சரி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் இதைப் பெற்றுக்கொண்டு, குணமாகி, மகிழ்ச்சியோடு உங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வீர்களாக. ஆமென். இப்போது, உங்கள் முழு இருதயத் தோடும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், கர்த்தரைத் துதித்துக்கொண்டும் அப்படியே செல்லுங்கள். ஆமென். 35 அப்படித்தான் நண்பர்களே. நீங்கள் தேவனுக்கு உங்கள் நன்றியைக் காட்ட வேண்டும். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காவது ஏதாவது செய்ய விரும்பினால் மற்றும் நான் சொன்னால்... தேவன் நமக்காகச் செய்தது போல நான் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு, யாரோ ஒருவர்... நான் யாருக்காவது இங்கே ஒரு சிறிய காசோலையை எழுதிக்கொடுத்து, "சகோதரனே, வெளிநாடுகளில் உள்ள உங்கள் ஊழியத்துக்கோ அல்லது வேறு எதற்கோ இது உங்களுக்கு" என்று நான்-நான் கூறுவேன். அவர் அதை வாங்கிக்கொண்டு, "ம்-ஹும்" என்பார். நான்-நான்-நான் சற்று வருத்தமாக உணர்வேன், நீங்கள் உணர மாட்டீர்களா? ஓ, அவர் என்னிடம், "நன்றி சகோதரர் பிரன்ஹாம். உங்களுக்கு இருப்பதிலிருந்துதான் கொடுக் கிறீர்கள் என்று எனக்கு-எனக்குத் தெரியும். புரிகிறதா? ஆனால் நான் நிச்சயமாக இதற்கு நன்றி கூறுகிறேன் சகோதரர் பிரன்ஹாம்" என்று சொல்வார் என நான் எதிர்பார்ப்பேன். 36 அதே போலத்தான் நீங்களும் சொல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், "பிதாவே, உமக்கு ஸ்தோத்திரம். நான் சுகமடைவதற்காக இங்கே வந்தேன், இவையெல்லாம் எனக்கு விளக்கப்பட்டுள்ளன. நீர் இப்போது அதை எனக்கு நிரூபித்துவிட்டீர். எனவே நான் இங்கிருந்து மகிழ்ச்சியோடு செல்லத் தயாராக இருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்." அப்படியே குணமாகி மகிழ்ச்சியோடு செல்லுங்கள். அப்படித்தான் செய்ய வேண்டும். அவர் எதுவுமே சொல்லாவிட்டாலும், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும், ஏனென்றால் வார்த்தை முதலாவதாக அப்படிச் சொல்லி யிருக்கிறது. அதுதான் ஆரம்பம், சரியா சகோதரர்களே? அதுதான் ஆரம்பம், அந்த வார்த்தை. சரி, அந்த அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். சரி. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அங்கே அமர்ந்திருக்கும் சிறிய அம்மையாரே, உங்களுக்கு குடல் மற்றும் ஆசனவாய் (rectal) பிரச்சினை இருக்கிறது, அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறீர்கள். அது சரிதானே? சில நிமிடங்களுக்கு முன்பு உங்கள் இருக்கையிலேயே நீங்கள் அதிலிருந்து குணமாக்கப்பட்டீர்கள். நீங்கள்-நீங்கள் அங்கே அமர்ந்திருக்கிறீர்கள்; நான்-நான் காத்திருக்க முயன்றேன். சிறிது நேரம் கழித்து உங்களுக்குச் சொல்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் நான் அதை மறந்துவிடுவேனோ என்று பயந்தேன். 37 இப்போது, நீங்கள் வீட்டிற்குப் போங்கள், அது நின்றுவிடும். அந்த வயிற்றுப்போக்கு மற்றும் எல்லாமே உங்களை விட்டு நீங்கிவிடும். மற்றும்-மற்றும் எல்லாம் சரியாகிவிடும், அந்த மூலவியாதி மற்றும் காரியங்கள் நீங்கிவிடும், நீங்கள் நலமாகி விடுவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசம் வையுங்கள். இப்போது அது உங்கள் விசுவாசமே. நான் உங்களுக்காக ஜெபிக்கவே இல்லை. உங்கள் விசுவாசமே உங்களை இரட்சித்தது. உங்கள் விசுவாசமே உங்களைச் சொஸ்தமாக்கியது. காண்கிறீர்களா, காண்கி றீர்களா? வரிசையில் நிற்பதற்கு உங்களிடம் ஜெப அட்டையோ அல்லது வேறு எதுவுமோ இல்லை, ஏனென்றால் நீங்கள் இங்கே வருவதற்கான வழியே இல்லை. ஆனால் நீங்கள் விசுவாசம் மட்டுமே வைத்திருந்தீர்கள். தேவன் உங்களைக் குணமாக்கி சொஸ்தமாக் கியிருக்கிறார். எனவே-அவர் அப்படித்தான் அதைச் செய்கிறார். ஆமென். அம்மா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? விசுவாசிக்கிறீர்களா? சரி, உங்களைச் சொஸ்தமாக்க இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஏதோ ஒருவிதமான-ஒரு நரம்பு சம்பந்தமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். அது சரிதானே? நீங்கள் மிகவும் பதட்டமாகவும், கலக்கமாகவும் இருக்கிறீர்கள். சொல்லப் போனால், நீங்கள்-நீங்கள் சிகாகோவிலிருந்து வரவில்லை. நீங்கள் வெளியே இருந்து... நீங்கள்-நீங்கள்-நீங்கள் வெகுதொலைவிலிருந்து-கிழக்கு திசையி லிருந்து, இங்கே வந்திருக்கிறீர்கள். ஆம். சரி. அவர் உங்களைக் குணமாக்கித் திருப்பி அனுப்புவார் என்று விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்களா? அது சரி. இப்போது, உங்கள் கைகளை உயர்த்தி, "கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுங்கள். ஆமென். 38 இப்போது, அந்தப் பதட்டம் உங்களை விட்டு நீங்கிவிட்டது. நீங்கள் அங்கே நின்று கொண்டிருந்த போதே குணமாக்கப் பட்டுவிட்டீர்கள். தேவனைத் துதித்துக் கொண்டும் மகிழ்ச்சியோடும் பஃபலோவுக்கு (Buffalo) திரும்பிச் செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. [சபையார் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்கிறார்கள்] காண்கிறீர்களா? அந்தப் பெண்ணுக்காக நான் ஜெபிக்கவே இல்லை, அவளைத் தொடவே இல்லை. ஒரு விமானம் மேலே எழும்புவதை நான் பார்த்தேன். அந்தப் பெண் எங்கே இருந்து பார்த்தாளோ, அந்த விமானத்தின் வலதுபக்கத்தை நான் பார்த்தேன், அவள் எழும்பி வந்த இடத்திலிருந்து வலதுபுறத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி இருந்தது. அவள் கிழக்கிலிருந்து எங்கிருந்தோ வந்திருக்கிறாள் என்று நான் அறிந்துகொண்டேன். ஏனென்றால் அவள்... நயாகரா நீர்வீழ்ச்சியைக் கடந்து வந்தாள். அது சரிதானே அம்மா? சரி, ஐயா. அது சரிதான். அப்போது அது தரிசனத்தில் வந்தது. ஆமென். அல்லேலூயா. நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒருபோதும் தவறமாட்டார். 39 அந்தப் பழைய சிறுநீரகப் பிரச்சினையை முடித்துவிட்டு, அதை தேவனிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு, "நான் வீட்டிற்குச் சென்று குணமாகப் போகிறேன்" என்று சொல்கிறீர்களா? இப்போதே அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இந்த மேடையை விட்டு இறங்கி, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லி, மகிழ்ச்சியாக இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதித்து உங்களை நலமாக்குவார். நீங்கள் ஒருபோதும் மூக்குக்கண்ணாடி அணிய விரும்பவில்லை, அப்படித்தானே? அந்தக் கண் பிரச்சினையிலிருந்து நீங்கள் குணமாக விரும்புகிறீர்கள், அது சரிதானே? மேலும் நீங்கள் பதட்டமாகவும் கலக்கமாகவும் மற்றும் இது போலவும் இருக்கிறீர்கள். சரி. நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தி லேயே இயேசு உங்களைக் குணமாக்கிவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? போங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்தப் பிரச்சனை உங்களை விட்டு நீங்குவதாக. ஆமென். ஆமென். நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. நீங்களும் அப்படியே செய்யுங்கள் அம்மா, உங்களுக்கும் அதே பிரச்சனைதான் இருக்கிறது. இப்போது, மகிழ்ச்சியாகப் போங்கள். ஆம், ஐயா. அது முற்றிலும் சரிதான். இறங்கிப் போய், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுங்கள். "கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக" என்று சொல்லிக்கொண்டே, மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் செல்லுங்கள். ஆமென். 40 ஓ, இன்று இரவு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், நாம் இந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும்-கோட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பது அல்ல, கோட்டையைக் கைப்பற்ற வேண்டும். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார்... இப்போது பாருங்கள், அம்மா. இங்கே. அங்கே கடந்து வாருங்கள். ஒரு இளம் பெண்ணைப் போல நீங்கள் நடப்பதை நாங்கள் பார்க்கட்டும். அப்படியே நேராகக் கீழே வாருங்கள். அதற்கான நேரம் இதுதான். ஆம், அம்மா. அப்படித்தான். அப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள், நரம்பு ரீதியாகவும் கூட. மேலும்... அங்கே வரிசையின் முடிவில் அமர்ந்திருக்கிற நீங்களும் ஒரு நரம்புப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், இல்லையா? இல்லை. உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் உங்கள் கணவர். ம்-ஹும்! ஆம் ஐயா. நீங்கள் மருத்துவமனையில் இருந்தீர்கள், இல்லையா? நரம்புத் தளர்ச்சியினால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மருத்துவமனையில் செலவிட்டீர்கள், அது உண்மைதானே? சரி. இப்போது நீங்கள் வீட்டிற்குச் சென்று குணமாகலாம். 41 அம்மா, நீங்கள் அந்த அம்மாவை இடித்துவிட்டீர்கள். நீங்கள்-நீங்கள் அவரோடு ஏதோ... தொடர்புடையவர். அது சரிதானே? உங்களுக்கு மூட்டுவலி இருக்கிறது, இல்லையா, அந்த கட்டம் போட்ட உடையில் இருக்கும் அம்மா? நீங்களும் வீட்டிற்குச் சென்று குணமாக வேண்டுமா? சரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆராதனை முடிந்தவுடன், "அவருடைய நாமத்திற்கு மகிமை" என்று பாடிக்கொண்டே தெருவில் நடந்து செல்லுங்கள். மற்றும்... எழுந்து நில்லுங்கள். அது சரிதான் சகோதரனே. எழுந்து நின்று தேவனைத் துதியுங்கள். அது சரிதான். ஆமென். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவருடைய சுகமளிக்கும் வல்லமைக்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுங்கள். ஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒருபோதும் தவறமாட்டார். அவர் தவறுவதற்கு வழியே இல்லை. அவர் கர்த்தர். ஆமென். இப்போது விசுவாசம் வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், தேவன் அதை அருளுவார். 42 அது நகர்ந்துகொண்டே இருக்கிறது... நீங்கள் இருவரும் சகோதரிகளா? தேவன் ஒருவேளை... நான்... உங்களுக்குக் கொஞ்ச மாவது விசுவாசம் இருந்தால் அம்மா, நீங்கள்-நீங்கள் இன்றிரவு குணமாக்கப்படுவீர்கள். காண்கிறீர்களா? நீங்கள் இப்போது விசுவாசித்தால், இனி ஒருபோதும் அந்த ஊன்றுகோல்களைப் பயன்படுத்த மாட்டீர்கள். சரி, அந்த அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு ஆத்துமாவோடும்? உங்கள் முழு பலத்தோடும்? மன்னிக்கவும். நான்-நான் இருந்தேன்... பாருங்கள், நீங்கள் "ஆம்" என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது மிகவும் நல்லது. நான்... நீங்கள் "ஆம்" என்று சொல்ல வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? சரியாகச் சொன்னீர்கள். உங்கள் நெஞ்சிலும் உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது (அது சரிதானே?), ஒரு வலி. உங்களுக்கும் நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன, இல்லையா? நீங்கள் இப்போது வீட்டில் உள்ள யாரையோ பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது... அது ஒரு தாய் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு ஒரு தாய் இருக்கிறாள். அவளுக்கு ஒரு-ஒரு-ஒரு பக்கவாதம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அல்லது... ஆம். மேலும் உங்களுக்கு ஒருவரும் இருக்கிறார்... உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறது. அது சரிதான். 43 சொல்லப்போனால், நீங்கள் மார்க்கத்தின் படி கத்தோலிக்கர் அல்லவா? அது சரிதானே? நான் அந்த ஜெபமாலை மணிகளையும் சில காரியங்களையும் காண்கிறேன்... தேவன் உங்களைக் குணமாக்குவார் என்றும், அவர்களை நலமாக்குவார் என்றும், நீங்கள் மகிழ்ச்சியோடு சந்தோஷமாக வீட்டிற்குச் செல்வீர்கள் என்றும் விசுவாசிக்கிறீர்களா... தேவ ஆவியின் முழுமையைப் பெற-பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட நீங்கள் விரும்பமாட்டீர்களா? அந்த ஆசீர்வாதத்தை நீங்கள் விரும்பமாட்டீர்களா-அனுபவிக்க மாட்டீர்களா? இது உங்களுக்காகத்தான் என்று உங்களுக்குத் தெரியுமா சகோதரி? நீங்கள் இதைப் பெற்றுக்கொள்வதற்காகவே இயேசு கிறிஸ்து மரித்தார். நீங்கள் இந்தக் கூட்டத்தை விட்டுச் செல்வதற்கு முன்பாக பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கான அப்போஸ்தலிக்க வழி அவர்கள்மேல் கைகளை வைப்பது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். நீங்களும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள். அதை விசுவாசிக் கிறீர்களா? சற்று நேரம் இங்கே வாருங்கள். 44 சர்வவல்லமையுள்ள தேவனே, இந்தப் பெண்மணி, நீர் தன்னை நலமாக்குவீர் என்று விசுவாசித்து, தன் முழு உண்மையோடு இங்கே நிற்கும்போது, நீர் அவளையும், இதோடு தொடர்புடைய எல்லாவற்றையும் குணமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவள் பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தையும் பெற்றுக்கொள்வாளாக. இந்தக் கடைசி நாட்களில், தேவனுக்குத் துதியையும் மகிமையையும் செலுத்தும் ஒரு சாட்சியாக அவள் இருப்பாளாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். "கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே மகிழ்ச்சியோடு மேடையை விட்டு இறங்கிப் போங்கள். ஆமென். அப்படித்தான். ஆமென். சில போதகர்கள் உடனடியாக அவளிடம் செல்ல வேண்டும். சரி, உங்களுக்கு விருப்பமென்றால் வாருங்கள். சரி. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை நலமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அது அற்புதம். சரி. நான் நீங்கள்... தேவன்மேல் விசுவாசம் வைத்து, தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். அந்த முதுகுப்பகுதி நேராகிவிடும், இனி உங்களுக்கு அந்தப் பிரச்சனை இருக்காது. அது சரிதானே? அது இப்போது போய்விட்டது. தேவன் அதை உங்களை விட்டு எடுத்துவிட்டார். இதுபோல உங்களைச் சற்று கீழே வளைத்துப் பாருங்கள். நான் சொல்வது புரிகிறதா? இப்போது, நீங்கள் மேடையை விட்டு இறங்கிச் சென்று மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் விசுவாசம் உங்களைக் குணமாக்கியது, சகோதரி. 45 சரி, வாருங்கள் ஐயா. ஐயா, நீங்கள் வரும்போது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, உங்களை நலமாக்குவதற்காக மரித்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவரிடம் கேட்டால், அந்த இருதய நோயிலிருந்து அவர் உங்களைக் குணமாக்குவார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அவர் அதை இப்போதே செய்கிறார் என்று விசுவாசிக் கிறீர்களா? அப்படியானால், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுங்கள். அது சரிதான். அப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். ஆமென். வாருங்கள், ஐயா. அது... ஆமென். சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், கறுப்பின மக்கள் தங்கள் மார்க்கத்தைக் குறித்து வெட்கப்படுவதில்லை. ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்ததிலிருந்து நான் அதை அறிவேன், அங்கே-அங்கிருந்துதான் அவர்கள் வருகி றார்கள். சகோதரனே, தேவனுடைய வல்லமை செயல்படுவதை அவர்கள் ஒருமுறை பார்க்கட்டும், நீங்கள் வேறு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆமென். ஓ, நாம் வெட்கப்பட வேண்டும். ஆமென். 46 இன்றிரவு ஒரு நல்ல பெரிய தடிமனான ஹாம்பர்கர் சாப்பிட சுவையாக இருக்கு மல்லவா? நீங்கள் பல நாட்களாக அதைச் சாப்பிடவில்லை. போங்கள், அதைச் சாப்பிடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை...?... ஆமென். அல்லேலூயா! இப்போது, அந்த மனிதர், அந்த கறுப்பின மனிதர், இருதய நோயிலிருந்து குணமாக்கப் பட்டு, சந்தோஷமாக மேடையை விட்டு இறங்கிச் செல்ல முடியுமென்றால், நீங்களும் அதே காரியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. போங்கள். அது சரிதான். சென்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அம்மா? அந்தப் பழைய மூட்டுவலி உங்களை விட்டு நீங்கிற்று. இறங்கிச் சென்று, கர்த்தர் உங்களுக்குச் செய்ததை மக்களுக்குக் காட்டுங்கள். ஆமென். ஆமென். அந்த இருதய நோயிலிருந்து விலகிச் செல்லுங்கள். "கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே கடந்து சென்று சொஸ்தமாகுங்கள். ஆமென். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, இயேசுவின் நாமத்தில், இந்தப் பெண்ணை ஆசீர்வதித்து அவளைக் குணமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்போது, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு ஸ்தோத்திரம். உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லிக் கொண்டே சந்தோஷமாகச் செல்லுங்கள். சரி. தேவன்மேல் விசுவாசம் வையுங்கள். ஆமென். நான்... 47 அங்கே அமர்ந்திருக்கும் அம்மையாரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இனி அந்தப் பழைய சைனஸ் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படப் போவதில்லை. அது-அது இப்போது உங்களை விட்டுப் போய்விட்டது. ஆமென். ஆமென். தேவன் உங்களைச் சொஸ்தமாக்குகிறார், சகோதரி. தேவன் உங்களோடு இருப்பாராக. அல்லேலூயா. அங்கே அமர்ந்திருக்கிற நீங்கள் அந்த வாதநோயில் இருந்து விடுபட விரும்பு கிறீர்களா? விரும்புகிறீர்களா? அதை அப்படியே விசுவாசித்து, எழுந்திருங்கள்; தேவன்மேல் விசுவாசம் வையுங்கள், தேவன் உங்களை நலமாக்குவார். ஆமென். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். சகோதரி வுட், அது நீங்கள் என்று நினைத்தேன். ஆனால் அது நீங்கள் அல்ல. உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்தான். அவளுக்குப் பெண்கள் சம்பந்தமான ஒரு கோளாறு இருக்கிறது. அவள் பதட்டமாக இருக்கிறாள், ஒருவித நரம்பு சம்பந்தமான மனநிலை. அவளுடைய நரம்புகளுக்கு ஏதோ நடந்திருக்கிறது. அது சரிதானே, அம்மா? உங்களுக்கு ஒரு-ஒரு சிறிய குடும்பப் பிரச்சினை இருக்கிறது. அது உண்மைதானே? சரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களை முழுமையாகச் சொஸ்தமாக்கி, எல்லாவற்றையும் நீக்கி, உங்களை முற்றிலும் நலமாக்குவாராக. தேவன் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்குச் சமாதானத்தை அருளுவாராக. 48 ஐயா, அந்த சைனஸ் பிரச்சனையோடு அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் குணமாக விரும்பினால், எழுந்து நின்று உங்கள் முழு இருதயத்தோடும் அதை ஏற்றுக்கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் அப்போதே உங்களைக் குணமாக்கிவிட்டார். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் அம்மா? என்னை தேவனுடைய ஊழியக்காரனாக விசுவாசிக்கிறீர்களா? சரி, ஜெப வரிசையில் நீங்கள் கடைசியாக இருப்பதால், உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். நீங்கள்-நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சரி. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது அன்பான வல்லமை முழுவதோடும் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா மற்றும்... 49 நாம் முன்பின் அறியாதவர்கள் என்று நினைக்கிறேன். நான்-நான் உங்களை அறியேன். என் வாழ்க்கையில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை. அங்கே இருக்கிற அந்தப் பெண்ணை யாருக்காவது தெரியுமா? யாராவது ஒருவருக்கு? சரி. மக்களுக்கு அந்தப் பெண்ணைத் தெரியும். அப்படியானால் நாம் ஒருவரையொருவர் அறியாதவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அது உண்மைதான். இப்போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார். அவர்கள்... நாம் ஏன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, "தேவனே நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் என்னுடையதை இப்போதே பெற்றுக்கொள்ளப் போகிறேன்" என்று சொல்லக்கூடாது. சரி. அது சரிதான். நீங்கள் ஒரு மிகச் சிறந்த காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள்... நான்-நான் உங்களை மதிக்கிறேன், உங்களைக் கனப்படுத்துகிறேன், ஏனென்றால் அது... நீங்கள் மலடியாக இருக்கிறீர்கள், உங்களுக்குக் குழந்தைகள் வேண்டும். அது சரிதானே? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; நடந்த காரியங்கள் மற்றும் இது போன்றவற்றைப் பற்றி யாரோ உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் அதைக் கேட்டு தேவன் அதை அருளாமல் இருந்ததே இல்லை. 50 சொல்லப்போனால், நீங்கள் ஒரு போத... இல்லை, உங்கள் கணவர் ஒரு போதகர். அது சரிதானே? சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்கள் விருப்பத்தை உங்களுக்கு அருளுவாராக. கர்த்தாவே, இந்தச் சிறிய பெண்ணை ஆசீர்வதித்து அவளைக் கனி தரச் செய்வீராக. நீர் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். ஆமென். யார் குணமாக்கப்பட விரும்புகிறீர்கள்? எழுந்து நில்லுங்கள். உங்களுக்கு விசுவாசம் இருந்தாலொழிய நீங்கள் இப்போது எழுந்து நின்றிருக்க மாட்டீர்கள். அது சரிதானே? இப்போது, உங்கள் விசுவாசத்தோடு இணைந்து செயல்படும் கிரியைகள் உங்களிடம் இருந்தால், உங்கள் கைகளை உயர்த்தி, உங்களால் முடிந்தவரை சத்தமாகக் கர்த்தரைத் துதியுங்கள். "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுங்கள். மேலும் பிதாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் குணமாக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன் (53-0901) 2